டொரொண்டோவில் இந்த வார இறுதியில் பெட்ரோல் விலை மேலும் குறைவடையும்
டொரொண்டோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த வார இறுதியில் பெட்ரோல் விலை மேலும் குறையும் என எரிபொருள்துறை நிபுணர் டேன் மெக்டீக் (Dan McTeague) கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பணிக்கூல விதிகள் தொடர்பான குழப்பம் காரணமாக எரிசக்தி சந்தை ஆறு வீதத்திற்கு மேல் சரிந்துள்ளது.
இதன் விளைவாக நியூயார்க் மர்க்கண்டைல் எக்ஸ்சேஞ்சில் (NYMEX) 18 சென்ட் கலனுக்கு குறைந்துள்ளது என்று மெக்டீக் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை (ஏப்ரல் 6) முதல், பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 - 9 சதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாமில்டன், லண்டன், கிச்சனர்-வாட்டர்லூ, பாரி, மற்றும் ஒட்டாவா ஆகிய இடங்களில் விலை லிட்டருக்கு 1.32 டொலர்களாக ஆக இருக்கலாம். ஏற்கனவே ஏப்ரல் 1ஆம் திகதி கனடிய அரசாங்கம் "கார்பன் வரியை" நீக்கியதால் பெட்ரோல் விலை 20 சதம் குறைந்தது.
வாகன சாரதிகள் சனிக்கிழமை வரை காத்திருக்கலாம், ஏனெனில் விலை குறைவுக்கு பின்னரே நிரப்புவது சிறந்த தேர்வாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.