இந்திய இஸ்ரேல் உறவை விளக்கும் ஜிப்லி புகைப்படம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் மோடி – நெதன்யாகு இணைந்துள்ள ‘ஜிப்லி’ ஆர்ட் ஒன்றை இஸ்ரேல் தூதரகம் வெளியிட்டு இருநாட்டின் உறவை குறிப்பதாக விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் ‘ஜிப்லி’ ஆர்ட் எனப்படும் அனிமேஷன் புகைப்படங்கள்தான் தற்போது பரவலாகிவருகின்றது.
இந்நிலையில் டெல்லியில் இருக்கும் இஸ்ரேல் தூதரகம் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியப் பிரதமர் மோடிக்கும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தும் விதமாக அழகான ‘ஜிப்லி’ ஆர்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில் இரு தலைவர்களுக்கும் இடையிலான பிணைப்பைப் படம்பிடித்து, இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வலுவான உறவுகளைக் குறிக்கும் வகையில் பதிவிட்டுள்ளது.
இதுவேளை இந்தியாவும் இஸ்ரேலும் பாதுகாப்பு, தொழில்நுட்பம் முதல் வர்த்தகம் மற்றும் விவசாயம் வரை பல்வேறு துறைகளில் வலுவான உறவைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.