கனடாவில் கொலை செய்யப்பட்ட 14 வயதான புலம்பெயர்ந்த சிறுமி! வெளிவரும் உண்மைகள்
கனடாவின் ரொறன்ரோவில் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட 14 வயது சிறுமி தொடர்பில் உருக்கமான தகவலை பதிவு செய்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
மால்டன் குடியிருப்பு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்களால் 14 வயது சிறுமி Taffash Riley சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை பொலிசாரால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை என்பதுடன், விசாரணையும் திணறி வருவதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சிறுமியின் நினைவாக அப்பகுதி பொதுமக்கள் நினைவஞ்சலி கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ஒரு குடும்பமாக இந்த நிகழ்வை முன்னெடுப்பதாக கூறியுள்ள மக்கள், சிறுமியை பறிகொடுத்து வாடும் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதே தற்போதைய சூழலில் நம்மால் செய்ய முடிந்த உதவி எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தொடர்புடைய சிறுமியின் குடும்பத்தினருக்காக McDermott என்பவர் பொதுமக்களிடம் இருந்து இணையம் ஊடாக 20,000 டொலர் நிதியும் திரட்டியுள்ளார்.
சிறுமியின் உடலை அவரது சொந்த நாடானா ஜமைக்காவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என குடும்பம் ஆசைப்படுவதாக தெரிந்த பின்னர் தம்மால் அழுகையை அடக்க முடியவில்லை என கூறும் McDermott, அதன் பொருட்டே நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
