ஆயிரம் டொலர்கள் தருகிறோம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் ; ட்ரம்ப் தெரிவிப்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டொலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்களை நாடுகடத்தும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இச்சூழலில், சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு மக்களை அமெரிக்க அரசு கைது செய்து, அதன்பின் அவர்களை நாடு கடத்த அரசுக்கு ஆகும் செலவைவிட, மேற்கண்டவாறு புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிதியுதவி அளித்து அதன்மூலம் அவர்களாகவே தங்கள் சொந்த செலவில் அமெரிக்காவை விட்டு தங்களது தாயகம் திரும்புவது அமெரிக்க அரசுக்கு செலவினங்களைக் குறைக்கிறது.
இதன் காரணமாகவே, இந்த நடவடிக்கையை ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.