இலங்கைக்கு செல்லலாம்; பயணத்தைடைகளை நீக்கிய பிரபல நாடுகள்!
பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் தமது பிரஜைகள் இலங்கைக்கு செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக தெரிவித்துள்ளன.
இந்நிலையில் குறித்த நாடுகளின் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது ஒரு நேர்மறையான நடவடிக்கை என்றும், குளிர்கால சுற்றுலா சீசன் சிறப்பாக செயல்படும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கையில் கடந்த மே 2022 முதல் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பில் அறிவுறுத்தல்களை பல நாடுகள் வழங்கியிருந்தன.
இந்நிலையில் , பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கான அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற அனைத்திற்கும் எதிராக வழங்கப்பட்ட பயண ஆலோசனைகளை திருத்தியுள்ளன.
இதையடுத்து , தற்போது பிரான்ஸ், நோர்வே, சுவிற்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பான தமது பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன.