கனடாவில் அரசாங்கத்தை ஏமாற்றிய அதிகாரி
கனடாவில் அரசாங்கத்தை ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததாக அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஆலோசகராக கடமையாற்றி வரும் ஒருவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டது.
போலியான ஆவணங்களை பயன்படுத்தி 18 மாத காலப்பகுதியாக இவ்வாறு மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 250000 டாலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
63 வயதான கிளாரா எலைன் விஸ்ஸார் என்ற பெண் அதிகாரி மீது இவ்வாறு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கிளேரா என்பவர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
அரசாங்க ஒப்பந்தங்களில் இவ்வாறு இவர் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உள்ளக விசாரணைகளின் மூலம் இந்த நபர் மோசடியில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையில் இந்த மோசடி இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.