தேசிய மக்கள் சக்திக்கான மக்கள் ஆணையில் மாற்றமா!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கான மக்கள் ஆணையானது, 50 வீதத்தை விடவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பல உள்ளுராட்சி மன்றங்களில் 50 வீதத்திற்கும் கூடுதலான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள தவறியுள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்திருந்தது.
இந்த நிலையில் இதுவரையில் வெளியான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளில் 50 வீத வாக்குகளை கடப்பதில் தேசிய மக்கள் சக்தி நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலவரப்படி, பல உள்ளுராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வகித்தாலும், அது ஆட்சியை நிறுவும் அளவிற்கு வலுவான மக்கள் ஆணையாக அமையப்பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், 339 உள்ளுராட்சி மன்றங்களில் இதுவரையில் சொற்ப எண்ணிக்கையிலான உள்ளுராட்சி மன்றங்களின் முழு முடிவுகளே வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.