நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம்: கனடாவில் வாழும் நபர்களுக்கு தொடர்பு
பிரபல நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்ட விடயத்தில், அது தொடர்பில் கனடாவில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை 5.00 மணியளவில், மும்பையிலுள்ள நடிகர் சல்மான் கான் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக மும்பை பொலிசார் இரண்டு பேரைக் கைது செய்துள்ளார்கள். அவர்கள் சல்மான் கானை பயமுறுத்துவதற்காகவே சுட்டதாகவும், அவர்கள் நோக்கம் சல்மான் கானைத் தாக்குவது அல்ல என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான சதித்திட்டம் கனடாவில் தீட்டப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஞ்சாபி பாடகரான Sidhu Moose Wala கொலையுடன் தொடர்புடைய, கனடாவில் வாழும் Lawrence Bishnoi கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இத்திட்டத்தைத் தீட்டியதாக கருதப்படுகிறது.
இதற்கிடையில், சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தும் முன், அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் தொப்பி அணிந்த மர்ம நபர்கள் சிலர் இரண்டு மூன்று முறை நடமாடுவது அங்குள்ள CCTV கமெராக்களில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.