ஹமில்டனைச் சேர்ந்தவர்கள் இரு வேறு லொத்தர் சீட்டிலுப்புக்களில் பரிசு வெற்றி
ஹமில்டனைச் சேர்ந்தவர்கள் இரு வேறு லொத்தர் சீட்டிலுப்புக்களில் பரிசு வென்றுள்ளனர்.
ஹமில்டன் பகுதியைச் சேர்ந்த 4 உறவினர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகைப் பணத்தை வென்றுள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டு காலமாக இந்த உறவினர்கள் ஒன்றாக இணைந்து லொத்தர் சீட்டிலுப்பில் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்த நான்கு பேரும் இணைந்து இரண்டு மில்லியன் டாலர்கள் பரிசு வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உறவினர்களில் மூன்று பேர் ஹமில்டனைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர் நியூ பவுண்ட்லாண்டை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வெற்றி பெற்ற லொத்தர் சீட்டு ஹமில்டன் மிக்ஸ் அண்ட் ஃபுட் மார்ட் கடைத் தொகுதியில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
நம்ப முடியாத ஒரு வெற்றி எனவும் இந்த வெற்றியை பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் லத்தர் சீட்டெளிப்பில் வெற்றி இயற்றியவர்கள் தெரிவித்துள்ளனர். பரிசு வென்ற ஒருவர் வீடு ஒன்றை கொள்வனவு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹமில்டனைச் சேர்ந்த மற்றும் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார்.
மரியான் ரிச்சர்ட்சன் என்ற நபர் இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.
75 வயதான குறித்த நபர் இன்ஸ்டன்ட் என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் 77, 777 டாலர்களை பரிசாக வென்றுள்ளார்.
கிடைக்கப்பெற்ற பணத்தொகையில் வீட்டு தளவாடங்களை கொல்லணும் செய்ய உள்ளதாகவும் ஒரு தொகுதியை நன்கொடையாக வழங்க உள்ளதாகவும் ரிச்சர்ட்சன் தெரிவிக்கின்றார்.