கனடாவில் பட்டப்பகலில் பூங்காவில் மீட்கப்பட்ட சடலம்: புகைப்படத்துடன் வெளியான தகவல்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் மிஷன் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
மிஷன் பகுதியில் அமைந்துள்ள கேஸ்கேட் அருவி பிராந்திய பூங்காவில் இந்த வார தொடக்கத்தில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
பகல் சுமார் 10.40 மணியளவில் மிஷன் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவப்பகுதிக்கு சென்ற பொலிசார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பில் வெள்ளிக்கிழமை வெளியான தகவலில், மிஷன் பகுதியை சேர்ந்த 40 வயதான Codi Carlyle Rogers என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்மணியை பூங்காவில் வைத்து எவரும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும், இந்த விவகாரம் தொடர்பில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேச வேண்டும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது புகைப்படம், பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட்டுள்ளதால், சம்பவத்தை நேரில் பார்க்க நேர்ந்தவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என நம்புவதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.