இலங்கையில் ஓரினச்சேர்க்கை உறவை மேம்படுத்த IMF கொடுத்த நிபந்தனை!
இலங்கையில் ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கான சட்டத்தை சிறிய பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோ அல்லது தேசிய வாக்கெடுப்போ தேவையில்லை என்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான விஜித் மலல்கொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மூன்று மனுதாரர்கள் இந்த மசோதாவை எதிர்த்து, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்றும், அது அரசியலமைப்புக்கு முரணானது ஆகவே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து நிதியுதவி கிடைக்க வேண்டுமென்றால் இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டுமென்று நிபந்தனையை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.