கனடாவில் பொலிஸார் மீது பட்டாசு வீசிய இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த கதி!
கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது பட்டாசுகளை வீசி எறிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓக்வில்லே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விக்டோரியா தின நிகழ்வுகளுக்காக நூற்றுக் கணக்கான இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
வான வேடிக்கைகளை வெடிக்கச் செய்தும் ஒருவர் மீது ஒருவர் பட்டாசுகளை வீசியும் இளைஞர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது 200 முதல் 300 வரையிலான இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் மீது பட்டாசுகளை வீசி எறிந்த 15 வயதான சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.