ரொறன்ரோவில் வானிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
கனடாவின் ரொறன்ரோ நகரில் கடுமையான மழை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
சூறாவளி காற்று காரணமாக கடுமையான மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Beryl புயல் காற்று காரணமாக தென் ஒன்றோரியோ பகுதியில் 40 தொடக்கம் 60 வரையிலான மில்லியன் மீட்டர்கள் அளவில் மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மழை வீழ்ச்சியானது மேலும் அதிகரிக்க கூடிய சாத்தியங்கள் உண்டு எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபட்ட அளவில் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
நகரில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் புதன்கிழமை வரையில் மழை பெய்யும் சாத்தியங்கள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.