மொத்தமாக தூக்கி வீசப்பட்ட பாலம்... தீவில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள்
இயன் சூறாவளியால் மொத்தமாக சேதமடைந்த பாலம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க தீவு ஒன்றில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் சுழன்று தாக்கிய இயன் சூறாவளியால் Sanibel பகுதியை இணைக்கும் ஒரே ஒரு பாலமும் சேதமடைந்துள்ளது. பாலத்தின் 50 முதல் 65 அடி வரை தண்ணீரில் விழுந்ததால், பாதுகாப்புக்கு எவரும் அங்கிருந்து வெளியேற முடியாதபடி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சானிபெல் தீவில் ஏறக்குறைய 7,000 பேர் வாழ்கின்றனர், பாலம் சேதமடைவதற்கு முன்பு எத்தனை பேர் வெளியேற முடிந்தது என்பது தொடர்பில் முறையானத் தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ஆனால், புயலுக்கு முன்னர் சானிபெல் மேயர் தீவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், சூறாவளியில் இருந்து பாலம் தப்பும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இயன் சூறாவளியால் பைன் தீவு பாலமும் சேதமடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு இல்லை என கூறப்படுகிறது.
இதனால் இரண்டு பாலங்களும் சீரமைக்கும் வரையில் மக்கள் நடமாட்டம் இருக்காது என்றே கூறப்படுக்கிறது.