எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும் ; மீண்டும் ஆரம்பித்த ட்ரம்ப்
இந்தியா- பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். எனக்கு 8 நோபல் பரிசுகள் கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் நான் பேராசை கொள்ளவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு
அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில்,ட்ரம்ப் பேசியதாவது: போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, வெனிசுலாவிற்குள் அமெரிக்கா விரைவில் தாக்குதலை தொடங்கும்.
நாங்கள் நிலத்திலும் அந்த தாக்குதலை தொடங்க போகிறோம். நிலத்தில் தாக்குதல் நடத்துவது மிகவும் எளிதானது. கெட்டவர்கள் எங்கு வாழ்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
போதைப்பொருட்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்யும் எவரும் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.
ஒரு போரை முடிவுக்கு கொண்டு வரும்போது ஒவ்வொரு முறையும், 'அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று அவர்கள் கூறுகிறார்கள்.
நான் இந்தியா- பாகிஸ்தான் உட்பட எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன். போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.
இப்போது அவர்கள், 'ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை எப்போதாவது முடிவுக்குக் கொண்டுவந்தால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று சொல்கிறார்கள்.
நான் முடிவுக்கு கொண்டு வந்த அனைத்துப் போர்களையும் நினைத்துப் பாருங்கள். ஒவ்வொரு போருக்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும். ஆனால் எனக்கு அது வேண்டாம். நான் பேராசைப்பட விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.