காலநிலை மாற்றத்தால் பூமியில் உருகும் பனி
காலநிலை மாற்றத்தால் பூமியில் உள்ள பனி இருப்பு உருகுவது மனிதர்களுக்கு புதிய அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதை ஆராய்ச்சி ஒன்று நிரூபித்துள்ளது.
பனி உருகும் நிலையில் இரண்டு டசனுக்கும் அதிகமான வைரஸ்களை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
அவற்றில் ஒன்று ஏரியின் அடிப்பகுதியில் உறைந்துகிடந்த வைரஸ், இது 48,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது என்று தெரியவந்துள்ளது.
ஐரோப்பிய விஞ்ஞானிகள் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பெர்மாஃப்ரோஸ்டிலிருந்து சில வைரஸ் மாதிரிகளைப் பெற்றுள்ளனர் அதை அவர்கள் சோதனை செய்துள்ளனர்.
விஞ்ஞானிகள் 13 புதிய நோய்க்கிருமிகளை உயிர்ப்பித்து வகைப்படுத்தினர்.அவற்றுக்கு ஜாம்பி வைரஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பல ஆயிரம் ஆண்டுகளாக உறைந்த பனியில் வாழ்ந்தாலும் அவை நோயை தொற்றச் செய்யும் வைரஸ்கள் ஆகும்.
வளிமண்டலங்களில் ஏற்படும் மாற்றங்களும், அவை வெப்பமயமாதலும், நிரந்தரமான உறைபனிகளை இளக்குவதால், அவை உருகுகின்றன.
இதனால் அவற்றில் உள்ளமீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன.அவை, சுற்றுச்சூழலை மேலும் மோசமாக்கும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.
ஆனால் செயலற்ற நோய்க்கிருமிகளின் மீது அதன் தாக்கம் பற்றிய தகவல்கள் பெரிய அளவில் கிடைக்கவில்லை.
ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக் குழுக்கள், தாங்கள் ஆராய்ச்சி செய்த வைரஸை உயிர்ப்பிப்பதால், எந்தவொரு உயிரியல் ஆபத்தும் ஏற்படாது என்று கூறுகின்றனர். ஏனெனில் உயிரியல் ஆபத்து இல்லாத வைரஸ்களின் விகாரங்களை மட்டுமே அவர்கள் உயிர்ப்பிக்கின்றனர்.
குறிப்பாக அமீபா நுண்ணுயிரிகளை பாதிக்கக்கூடியவை. விலங்குகள் அல்லது மனிதர்களை பாதிக்கக்கூடிய வைரஸ் மிகவும் தொந்தரவான விஷயம், எனவே அவற்றை உயிரிப்பிக்க முயல்வதில்லை என்று விஞ்ஞானிகள் தெளிவுபடுத்துகின்றனர்.
இந்த ஆய்வு தொடர்பாக முன்அச்சு களஞ்சியமான பயோரெக்சிவில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 'பண்டைய பெர்மாஃப்ரோஸ்ட் உருகிய பிறகு இந்த வைரஸ்களை வெளியிடுவது சாத்தியம்' என்று கூறும் கட்டுரை, இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.
அது 'ஒரு வைரஸ் வெளிப்புற சூழ்நிலையில் வந்த பிறகு எவ்வளவு காலம் தொற்று பரவுகிறது, அதை எப்படி தடுக்கலாம் மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு நபர் எத்தனை முறை பாதிக்கப்படலாம் என்பதை மதிப்பிடுவது இன்னும் சாத்தியமில்லை.' என அவர் கூறியுள்ளார்.
ஆனால் புவி வெப்பமடைதல் விடயத்தில், பெர்மாஃப்ரோஸ்ட் தொடர்ந்து உருகும்போது இந்த ஆபத்து அதிகரிக்கும் என்பதும், தொழில்துறை முயற்சிகள் காரணமாக ஆர்க்டிக்கில் அதிகமான மக்கள் வசிக்கத் தொடங்கியதால் பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.