கனடாவில் 'மாயமான' புலம்பெயர்தல் அலுவலரால் புலம்பெயர்வோர் பலர் எதிர்கொண்டுள்ள பிரச்சினை
நான் கனடாவுக்கு புலம்பெயர விண்ணப்பம் அளிக்கும்போது என் மகளுக்கு வயது ஒன்று. இப்போது அவளுக்கு மூன்று வயதாகிறது, ஆனாலும் இன்னமும் நாங்கள் இந்தியாவில்தான் இருக்கிறோம் என்கிறார் ஜிபி (Jibi Mathews).
ஜிபியைப் போலவே, கனடாவுக்கு செல்வதற்காக நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்துவிட்டு பலர் பல்வேறு நாடுகளில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது விண்ணப்பங்களுக்கு எந்த பதிலும் இல்லை.
அதற்கெல்லாம் காரணம் ஒரு நபர்...
ஒரு புலம்பெயர்தல் அலுவலர், இவர்களது விண்ணப்பங்களை ஆண்டுக்கணக்கில் தொடாமலே விட்டுவிட்டதால்தான் பலர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள்.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து, தங்கள் புலம்பெயர்தல் அலுவலரிடமிருந்து ஏதாவது தகவல் வருமா என காத்திருக்கிறது ஜிபியின் குடும்பம். தனது விண்ணப்பத்திற்கு என்ன ஆயிற்று, அது ஏற்றுக்கொள்ளப்படுமா, அல்லது நிராகரிக்கப்படுமா, என பல்வேறு எண்ணங்களால் பல முறை மன அழுத்ததிற்கு ஆளானதாக தெரிவிக்கிறார் ஜிபி.
ஜிபியைப் போலவே விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த Sehrish Saeed. தன் மகள் கனடாவில் வாழும் வாழ்க்கையைக் கனவு கண்டு காத்திருந்து, கனவு நிஜமாகாமலே கடந்த 2020 அக்டோபரில் உயிரிழந்திருக்கிறார் Sehrishஇன் தந்தை.
இவர்களைப் போலவே பல நாடுகளில் பலர் தங்கள் விண்ணப்பங்களில் நிலை தெரியாமல், அடுத்த என்ன செய்வது, என்ன வேலை செய்வது, புதிதாக ஒரு நிரந்தர வேலையில் இணைவதா வேண்டாமா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
ஊடகங்கள் விசாரித்ததில், அந்த புலம்பெயர்தல் அலுவலர், அவரது பெயரை சட்டப்படி வெளியிட முடியாது, அவரது எண் DM10032, அவர் பணியில் இருப்பதாகவும், அவர் பணி செய்துகொண்டிருப்பதாகவும், விண்ணப்பங்கள் பரிசீலனை தாமதிப்பதற்கு அவரை மட்டுமே குறை சொல்ல முடியாது, அது பல அலுவலர்களின் வேலை என்றும் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடமிருந்து பதில் வந்துள்ளது.
மேலும், கொரோனா காலகட்டம் முதலான காரணங்களால் பலரது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட தாமதமாகியுள்ளதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு, தாமதத்தைத் தவிர்க்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஜிபிக்கு சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை, அவரது மருத்துவப் பரிசோதனை முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடமிருந்து ஒரு செய்தி வந்துள்ளதால் அவர் சற்று ஆறுதலடைந்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021