சிங்கப்பூர் வாகன உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
சிங்கப்பூர் வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணங்கள் வாகனங்களுக்கான தேவையையும் அவற்றின் விநியோகத்தையும் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு முதல் வாகன எண்ணிக்கை அதிகரிப்பு விகிதம் பூஜ்யம் விழுக்காடு என்று அவர் கூறினார்.
அதனால் வாகன உரிமைச் சான்றிதழ்களின் விநியோகம், பதிவு நீக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே பெரும்பாலும் நிர்ணயிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டு அதிரடித் திட்டத்திற்குப் பின்பு, அனைத்து வாகனங்களுக்கும் வாகன உரிமைச் சான்றிதழ்களுக்குமான தேவை அதிகரித்திருப்பதாக அமைச்சர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
அதே வேளையில், பதிவு நீக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், வாகன உரிமைச் சான்றிதழ்களின் விநியோகம் குறைந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.
அதனால் வாகன உரிமைச் சான்றிதழ்க் கட்டணம் அதிகரித்து வருவதாக நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அவர் பதிலளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.