அமெரிக்காவில் மனிதர்களுக்கு பறைவைக் காச்சல்!
அமெரிக்காவின் கொலோராடோவில் (Colorado) கோழிப் பண்ணையின் 4 ஊழியர்களுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 5ஆவது நபர் ஒருவருக்கு அது தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதேசமயம் மனிதர்களுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்றும்போது அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டுத் தடுப்பு நிலையம் தெரிவித்தது.
அத்துடன் H5N1 பறவைக் காய்ச்சல் கிருமி உருமாறி மக்களிடையே எளிதில் பரவக்கூடிய தன்மையைப் பெற்றால் பெருந்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அது கூறியது.
எனினும் நோய் தொற்றியவர்களுக்குத் தற்போது மிதமான அறிகுறிகளே உள்ளதாகவும், கண்கள் சிவந்திருப்பதாகவும், கண்களில் எரிச்சல் இருப்பதாகவும் நோய்வாய்ப்பட்டவர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு மிதமான சுவாசப் பிரச்சினைகளும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.