பிரான்ஸில் நள்ளிரவில் நடந்தேறும் சம்பவம்; மக்கள் மத்தியில் பீதி!
பிரான்ஸில் மர்மமான முறையில் வாகனங்கள் கவிழ்ந்து வீழ்ந்தமையினால் மக்கள் பீதியில் உள்ளதாக கூறப்படுகின்றது. இச்சம்பவம் தென்மேற்கு பிரான்சில் உள்ள Ariège பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் அனைத்தும் கவிழ்ந்த நிலையிலேயே காணப்படுவதாக பலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அங்கு இரவு உரிய முறையில் நிறுத்தப்பட்டிருந்த காரை காலை நேரம் பார்க்கும் போது, வாகனம் கவிழந்து கிடப்பதாக பல குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சனிக்கிழமை, அறிஎஜ் (Ariège) அமைந்துள்ள தனது வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். வழக்கமாக வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் அவரது கார் அன்றையதினம் இடது பக்கமாக கவிழ்ந்து கிடந்துள்ளது.
எனினும் இது புதிய விடயமல்ல என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை கடந்த ஒரு சில வாரமாக பிரான்ஸ் முழுவதும் பல நகரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளதார்.
காரில் உள்ள கெட்டலிடிக் கன்வேட்டர் (catalytic converter) எனப்படும் பாகத்தை திருடுவதற்கு திருடர்கள் இவ்வாறு செய்வதாக கூறப்படும் அதேவேளை, இந்த பாகம் வாகன துறையில் அதிகம் தேடப்படும் ஒன்றெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கெட்டலிடிக் கன்வேட்டர் (catalytic converter) கறுப்பு சந்தையில் அதிக விலையில் அப் பாகம் விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.