கனடாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது – இந்தியா
கனடாவினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என இந்தியா தெரிவித்துள்ளது.
கனடாவின் இரண்டு தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது, இந்தியா இணைய வழியாக தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை என சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
கனடிய தேர்தல்களில் இந்தியா தலையீடு செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜய்ஸ்வால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கனடாவில் கடந்த 2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது இந்தியா தலையீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வேறும் நாடுகளின் ஜனநாயக செயற்பாடுகளில் தலையீடு செய்வது இந்தியாவின் கொள்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.