எலோன் மஸ்க்கை சந்தித்து தனது கனவை நனவாக்கிய இந்திய இளைஞர்
புனேவைச் சேர்ந்த இந்திய மென்பொருள் உருவாக்குன் பிரனய் பத்தோல் (Pranay Pathole) , எலோன் மஸ்க்கை (Elon Musk) சந்தித்து தொழில்நுட்ப தொழில்முனைவோரை சந்திக்கும் தனது கனவை நனவாக்கிக்கொண்டார்.
23 வயதான இவர் (Pranay Pathole) விண்வெளி மற்றும் ராக்கெட்டுகளைப் பற்றிய கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுப்படுவதுடன் எலோன் மஸ்க்கின் (Elon Musk) படைப்புகளில் கூடுதல் ஆர்வம் கொண்டவர்.
டேடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பத்தோல் (Pranay Pathole), மைக்ரோ பிளாக்கிங் இணையதளத்தில் பலவிதமான சிக்கல்கள் - தொழில்நுட்ப விஷயங்கள், கிரகங்களின் தேவைகள் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புதல் போன்ற பல விடயங்களை தொழில்நுட்ப அதிபரான எலோன் மஸ்க்குடன் (Elon Musk) அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார்.
It was so great meeting you @elonmusk at the Gigafactory Texas. Never seen such a humble and down-to-earth person. You're an inspiration to the millions ? pic.twitter.com/TDthgWlOEV
— Pranay Pathole (@PPathole) August 22, 2022
இந்நிலையில் இளம் பொறியாளரான பத்தோல (Pranay Pathole) நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது உலகின் பணக்காரராக இருக்கும் மஸ்க் (Elon Musk) உடன் தனது முதல் மெய்நிகர் தொடர்பு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
