கனடாவில் 59 வயதான பெண் கைதி தப்பியோட்டம்
கனடாவில் 59 வயதான பெண் ஒருவர் சிறைச்சாலையிலிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன.
கனடாவின் கிச்சனரில் உள்ள கிரான்ட் வெலி இன்ஸ்டிடியூசன் ஒப் வுமென் சிறையில் இருந்து 59 வயது கைதி ஒருவர் காணாமல் போயியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பைதிகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் வழமையான கணக்கெடுப்பின் போது கரோலின் புர்டனைக் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பிடிவிராந்து உத்தரவு
கரோலின் $5,000-க்கு மேற்பட்ட மோசடி வழக்கில் 5 ஆண்டு தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோலினின் உயரம் 5 அடி 5 அங்குலம், எடை 59 கிலோ, வெளிர் நிறச் சருமம், நீலக் கண்கள், பழுப்பு நிற முடி ஆகிய அடையாளங்களைக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் கைதியை கைது செய்வதற்காக விசேட பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோலினின் இருப்பிடத்தைப் பற்றிய தகவல் உள்ளவர்கள் உடனடியாக காவல்துறையினரிடம் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.