50,000 பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இணையப் பாதுகாப்பு பயிற்சி
Google நிறுவனம் அடுத்த ஓராண்டில், 50,000 பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இணையப் பாதுகாப்புக் குறித்துப் பயிற்சி அளிக்கவிருக்கிறது.
நிறுவனம் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடனும் ஊடக அறிவாற்றல் மன்றத்துடனும் இணைந்து இணையப் பாதுகாப்புத் திட்டத்தை நடத்தவிருக்கிறது.
மக்களின் வாழ்க்கையையும் வேலைச் சூழலையும் மேம்படுத்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கண்டறியவும் நிறுவனம் திட்டமிடுகிறது.
இன்று Google நிறுவனம் சிங்கப்பூரில் தடம்பதித்த 15ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. சிங்கப்பூரில் 24 பேருடன் தொடங்கியது நிறுவனம் இன்று 3,000க்கும் அதிகமனோர் பணிபுரிகின்றனர்.
சிங்கப்பூரில் மூன்றாவது தரவு நிலையத்தையும் அமைத்துள்ளது கூகுள். அதையும் சேர்த்து சிங்கப்பூரில் தரவு நிலையங்களில் அது செய்துள்ள முதலீடு கிட்டத்தட்ட 1.2 பில்லியன் வெள்ளி என கூறப்படுகின்றது.
இன்றைய நிகழ்ச்சியில் துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் (Lawrence Wong), தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் தியோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இணையம் குறித்த விழிப்புணர்வு, இணையப் பாதுகாப்பு ஆகியவற்றை இளையர்களுக்குக் கொண்டுசெல்வதன் முக்கியத்துவத்தை இதன்போது திரு. வோங் வலியுறுத்தினார்