சுவிஸ்சர்லாந்தில் விரைவில் அறிமுகமாகும் தற்கொலை பாட் கள்!
சுவிஸ்சர்லாந்தில் நோயாளிகள் மற்றும் முதியவர்கள் விருப்பத்துடன் கருணைக்கொலை செய்துகொள்ள சட்டம் அனுமதிக்கிறது. அதை தனிமனித உரிமையாக அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது.
இந்த நிலையில் அவ்வாறு இறப்பதற்கு விருப்பப்படுபவர்கள் வலியில்லாமல் இறக்க தற்கொலை பாட் களை விரைவில் சுவிஸில் அறிமுகப்படுத்த உள்ளது.
சார்கோ கேப்சியூல் என்று அழைக்கப்படும் இந்த பாட் -கள் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆகும்.
ஒரு நபர் படுத்துக்கொள்ளும் அளவில் உள்ள இந்த கேப்சியூலுக்குள் நபர் படுத்ததும் ஒரு பட்டனை அழுத்தினால் உள்ளே காற்றின் ஆக்சிஜன் வாயு வெளியேறி நைட்ரஜன் மட்டுமே மிஞ்சும். இதனால் மயக்கம் ஏற்பட்டு ஹைபோக்ஸியா மூலம் உயிரிழப்பு ஏற்படும்.
சுவாசிக்கும் காற்றானது 78.09% சதவீத நைட்ரஜனாலும், 20.95% ஆக்சிஜனாலும், 0.93% ஆர்கான், 0.04% கார்பன் - டைஆக்ஸைட் ஆகியவற்றாலும் ஆனது ஆகும்.
தீராத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் முதியவர்கள் அமைதியான மரணத்தை எதிர்கொள்வதற்கு இது பயன்படும் என்று இந்த திட்டத்தை இதுசார்த்து இயங்கி வரும் கடைசி புகலிடம் [Last அமைப்பு வரவேற்றுள்ளது.