உரிமைகளை விட்டுத்தர முடியாது: ஈரான் பிரபலம் அதிரடி
ஈரானின் பிரபல நடிகையான தாரனே அலிதூஸ்டி ஹிஜாப் அணியாமல் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு போராட்டாக்காரர்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் பிரபல நடிகை தாரனே அலிதூஸ்டி ஹிஜாப் இல்லாமல் தனது புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டு போராட்டாக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
புகைப்படத்தை பதிவிட்ட அவர் அதில், நான் இங்குதான் இருக்கிறேன். இங்கிருந்து வெளியேறும் எண்ணம் இல்லை. எனது பணிகளை நிறுத்திவிட்டு இப்போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் ஆதரவாக நான் இருக்கப் போகிறேன்.
நான் அவர்களுக்காக பரிந்துப் பேசப் போகிறேன்.
நான் எனது தாய் நாட்டுக்காகப் போராடுவேன். எனது உரிமைகளுக்காக நிற்க நான் எந்த விலையையும் கொடுப்பேன். முக்கியமாக, இன்று நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.