பிரித்தானியருக்கு மரணதண்டனை நிறைவேற்றிய ஈரான்!
பிரித்தானிய குடியுரிமை கொண்ட ஒருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மற்றும் ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவரான அலிரேசா Akbari (61) என்பவர்தான் ஈரானால் கொல்லப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு முதல் சிறையிலடைக்கப்பட்டிருந்த Alirezaவுக்கு தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அலிரேசா பிரித்தானியாவுக்காக உளவு பார்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அலிரேசா ஈரான் அரசில் மிக உயர்ந்த பதவிகளை வகித்தவர் ஆவார். வெளிவிவகாரங்களுக்கான பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பதவியையும், உச்ச தேசிய பாதுகாப்புக் கவுன்சிலில் மிக உயரிய பதவி ஒன்றையும் அவர் வகித்துள்ளார்.
அத்துடன், கடற்படைத் தளபதியின் ஆலோசகராகவும், பாதுகாப்பு அமைச்சகக ஆய்வு மையத்தின் பிரிவு ஒன்றின் தலைவராகவும் இருந்துள்ளார் அவர்.
ஆனால், அலிரேசா தனது பதவியைப் பயன்படுத்தி பிரித்தானியாவின் இரகசிய உளவு அமைப்பான MI6க்கு முக்கிய உளவாளியாக மாறிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானின் இந்த கொடூர செயலை வன்மையாகக் கண்டித்துள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak), காட்டுமிராண்டித்தன ஈரான் அரசின் கோழைத்தனமான நடவடிக்கை இது என்றும், தன் சொந்த மக்களுடைய மனித உரிமை மீதே ஈரானுக்கு மரியாதை இல்லை என்றும் கூறியுள்ளார்.