தவிடுபொடியான ஈரானின் திட்டம்!
ஒரு செயற்கைக்கோளுடன் ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த ஒப்பந்தம், அமெரிக்க நலனுக்கு எதிரானது என்று கூறி அதில் இருந்து விலகுவதாக 2018-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது டிரம்ப் அறிவித்தார்.
அதில் இருந்து ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இந்த நிலையில் ஈரான் விண்வெளி திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிறது.
ஆனாலும் அந்த திட்டங்கள் எதுவுமே வெற்றி பெறாதது பெருத்த சோகமாக ஈரானுக்கு அமைந்துள்ளது.
இதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்த நாட்டின் செம்மான் மாகாணத்தில் இமாம் கொமேனி விண்வெளித்தளத்தில் இருந்து ஒரு செயற்கைக்கோளுடன் ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இது மேக்ஸார் டெக்னாலஜிஸ் செயற்கைக் கோள் மூலம் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் ஏவுதளத்தில் ராக்கெட் ஸ்டாண்ட் எரிந்து சேதம் அடைந்திருப்பதையும், வாகனங்கள் அதைச்சுற்றி வந்ததையும் செயற்கைக் கோள் படம் காட்டுகிறது.
வெற்றிகரமான ஏவுதல்கள் பொதுவாக ராக்கெட் கேண்ட்ரிகளை சேதப்படுத்தாது என்று சொல்லப்படுகிறது.