கடையில் குளிர்சாதனம் உள்ளதா; பிரான்ஸில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
பிரான்ஸில் குளிர்சாதன இயந்திரங்கள் கொண்ட கடைகள் அவற்றின் கதவுகளை மூடி வைக்கும்படி அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்குக் கட்டுப்பட்டு நடக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். எரிசக்தியை வீணாக்காமல் கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸில் புதிய சட்டம் வருகிறது.
கடைகளில் குளிர்சாதன இயந்திரம் இயங்கும்போது கதவுகளைத் திறந்துவைப்பதால் எரிசக்திப் பயன்பாடு 20 விழுக்காடு அதிகரிப்பதாகச் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆக்னஸ் பன்னியர்-ருனாச்சர் (Agnes Pannier-Runacher) குறிப்பிட்டார்.
அத்துடன் ஒளிரும் விளம்பரப் பலகைகளைப் பின்னிரவு 1 மணியிலிருந்து காலை 6 மணிவரை தடை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை பிரான்ஸில் சில நகரங்கள் ஏற்கனவே அத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அதை நாடு முழுவதும் விரிவுபடுத்த பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.