ரஷ்ய அதிபருடன் இஸ்ரேல் பிரதமர் சந்திப்பு
மாஸ்கோவில் உள்ள ரகசிய இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் சந்தித்தார்.
பத்து நாட்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கிய பின்னர் புட்டினைச் சந்தித்த முதல் மேற்கத்திய தலைவர் பென்னட் ஆவார். முன்னதாக, ரஷ்யா - உக்ரைன் போரைத் தீர்ப்பதற்கான முதல் இரண்டு சுற்றுப் பேச்சு வார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் சந்திக்க ஒப்புக்கொண்டனர்.
மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை மார்ச் 7 திங்கட்கிழமை நடைபெறும் என உக்ரேனிய பேச்சுவார்த்தையாளர் டேவிட் அரகாமியா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையை வலுப்படுத்தும் வகையில், ரஷ்ய அதிபரை இஸ்ரேல் பிரதமர் சந்தித்து பேசினார்.