கனடாவில் சுகாதாரத்துறை தனியார்மயப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு
கனடாவில் சுகாதாரத்துறை தனியார் மயப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்.டி.பி கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் (Jagmeet Singh ) தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் சில மாகாணங்களில் சுகாதார துறையின் பல சேவைகளை தனியாருக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கனடாவின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்கு மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு சேவைகளை வழங்கி தனியார் துறையினர் லாபமீட்டுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
தாதியர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறை காரணமாக சுகாதார சேவை வழங்குவதில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது.
சில இடங்களில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் மூடப்படும் சந்தர்ப்பங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், சுகாதாரத்துறை எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தனியார்மயப்படுத்தல் தீர்வாக அமையப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட், நாடு முழுவதிலும் பயணம் செய்து சுகாதாரத்துறையை தனியார் மயப்படுத்தும் கொள்கைக்கு ஆதரவு திரட்டி வருவதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜக்மீட் சிங் தெரிவித்துள்ளார்.