மிகபெரும் தொழிநுட்ப நகரமாக மாறும் ஜப்பானின் தூங்கும் கிராமம்!
ஜப்பானின் தூங்கும் கிராமம் என அழைக்கப்படும் ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள தீவான ‘ஷிகோகுவில்’ அமைந்துள்ள ‘டோகுஷிமா’ என்னும் மிகவும் பின்தங்கிய கிராமத்தை ஜப்பானின் பாரிய தொழிநுட்ப வலையமைப்பு கொண்ட நகராக புனரமைப்பு செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமான மேற்படி கிராமத்தில் தொழிநுட்ப கல்லூரி ஒன்றினை நிறுவி அதன் மூலம் மாணவர்களை பயிற்றுவித்து அவர்களை மேற்படி கிராமத்தை அபிவிருத்தி செய்யும் பணிகளில் ஈடுபடுத்தவுள்ளதாக யப்பானின் நவீன தொழிநுட்பத்தின் தந்தை என அழைக்கப்படும் “சிகாஹிரோ டெராடா” தெரிவித்திருக்கின்றார்.
மேலும் “டோகுஷிமா” கிராமத்தில் பல நவீன தொழிநுட்ப வசதிகளைக் கொண்ட விற்பனை நிலையங்களை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் மேற்படி பிரதேசத்தை விரைவில் டிஜிட்டல் பிரதேசமாகவும், யப்பானின் மிக முக்கிய தொழிநுட்ப பிரதேசமாகவும் மாற்றுவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் “சிகாஹிரோ டெராடா” தெரிவித்திருக்கின்றார்.