அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் Joe Biden காசாவின் மனிதாபிமான நிலைமை பற்றி நிருபர்கள் ஒரு கேள்வியை முன் வைத்தனர்.
அப்போது பேசிய ஜோ பைடன் 'மனிதாபிமானப் பொருட்களுக்கான நுழைவாயிலைத் திறக்க மெக்சிகோவின் அதிபர் எல்.சி.சி.-யுடன் பேசினேன். நான் அவரை வாயிலைத் திறக்கச் சொன்னேன்," என்று கூறினார்.
எகிப்திய தலைவர் அப்துல் பைத்தாக் எல்.சி.சி.-யை தவறுதலாக "மெக்சிகோவின் அதிபதி" என்று ஜோ பைடன் குறிப்பிட்டார். இது சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது.
அமெரிக்க குடியரசுக் கட்சியினர் ஜோ பைடன் மறதி காரணமாக அடிக்கடி நினைவு இழக்கிறார் என்பதற்கான அண்மைய sஆதாரமாக அந்த வைரல் காணொளியை மேற்கோள் காட்டி மக்களிடம் பரப்ப முயற்சித்து வருகிறார்கள்.
86-வயதாகும் ஜோ பைடன் உலக தலைவர்களின் பெயர்கள் தொடர்பில் தற்போது 3-வது முறையாக தவறுதலாக உளறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.