தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலக வேண்டும்! உயர் மட்ட அதிகாரிகள்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் உயர் மட்ட அதிகாரிகள் விரும்புவதாக கூறப்படுகின்றது. அதில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமா, முன்னாள் சபாநாயகர் உள்ளிட்டோரும் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்களின் அடிப்படையில் ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்பை விட 5 புள்ளிகள் பின்தங்கியுள்ளதாகக் கருத்துக்கணிப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதேவேளை , கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஜோ பைடன் குணமடைந்ததன் பின்னர், மக்களுக்காகச் சேவையாற்றவுள்ளதாக தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
கட்சியின் நலன் கருதி, ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலக வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் உயர் மட்ட அதிகாரிகள் விரும்புவதாக கட்சியின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அதனை நிராகரிக்கும் பைடனின் ஆதரவாளர்கள், இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பைடன் பொருத்தமானவர் எனவும் தெரிவித்துள்ளனர்.