வாய்தவறி உளறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; வைரலாகும் கணொளி!
ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா , ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஆயுதங்கள், தளவாடங்கள் ஆகியவற்றை வழங்கி உகரைனுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
அத்துடன் உக்ரைனுக்கு ராணுவம், பொருளாதாரம் போன்ற உதவிகளை வழங்கி நட்பு நாடுகளுடன் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதி அளித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,
ரஷ்ய அதிபரின் போர் தாக்குதல் ரஷ்யாவை பலவீனமாகவும் மற்ற நாடுகளை வலுவாகவும் ஆகியிருக்கும். போர்க்களத்தில் ரஷ்ய அதிபர் புடின் ஆதாயம் பெறலாம் . ஆனால் நீண்ட காலத்திற்கு அவர் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த பேச்சு ரஷ்யாவுக்கு பேரிடியாக இருந்தாலும் பைடனின் பேச்சு விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. அதாவது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையின் போது அதிபர் ஜோ பைடன் உக்ரைனியர்கள் என்று சொல்வதற்கு பதில் ஈரானியர்கள் என கூறியது சமூக வலைத்தளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
LMFAO Kamala appears to mouth “Ukrainian” when Joe Biden said Iranian.
— Greg Price (@greg_price11) March 2, 2022
pic.twitter.com/E28NEmiPOv
ஜோ பைடன் பேசுகையில் , "கீவ் நகரில் தனது ராணுவப் படையினரால் அதிபர் புடின் சுற்றிவளைத்து இருக்கலாம் . ஆனால் ஒருபோதும் ஈரானியர்களின் இதயங்களை வெல்ல முடியாது என்று கூறினார்.
இதைக்கேட்டு குழப்பமடைந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் உக்ரைனியர்கள் என மெதுவாக சொல்ல, இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.