கனடிய பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி, பிரித்தானியாவின் புதிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் லெமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கடந்த வாரம் பிரித்தானியாவில் நடைபெற்ற பொது தேர்தலில் தொழிற்கட்சி வெற்றியீட்டியது.
அதன் பின்னர் ஆட்சி அமைத்த தொழிற் கட்சி அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் லெமியை கனடிய அமைச்சர் ஜோலி சந்தித்துள்ளார்.
அமைச்சர் ஜோலி, பிரித்தானியாவிற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கான நிதி மற்றும் இராணுவ உதவிகளை வழங்குவது குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த சந்திப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.