அமெரிக்காவின் வரி விதிப்புக்கு கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கம் ஆதரவு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரிவிதிப்பு மற்றும் 'அமெரிக்கா முதலில்' என்ற கொள்கையைத் தொடர்ந்து சர்வதேச வர்த்தக சந்தை நிச்சயமற்ற நிலையை எட்டியுள்ளது.
இந்த நிலையில், பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், உலகமயமாக்கல் சகாப்தத்தின் முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றவுள்ள உரையில் பிரித்தானியப் பிரதமர், கடந்த 1991ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட உலகமயமாக்கல் திட்டம் தோல்வியை எதிர்நோக்கியுள்ளதனை ஏற்றுக் கொண்டார் என 'த ரைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
இது தவிர, சுதந்திர வர்த்தகம் மற்றும் வெகுசன குடியேற்றத்தால் எந்த நன்மையும் ஏற்படவில்லை என நம்பும் அமெரிக்க ஜனாதிபதியின் ஆதரவாளர்கள், அவரது பொருளாதார தேசியவாதம் ஏன் பிரபலமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் 10 சதவீத அடிப்படை வரி மற்றும் பிற சமீபத்திய பாதுகாப்புவாத நடவடிக்கைகளுடன் பிரித்தானியா இணங்கவில்லை.
இருப்பினும், டொனால்ட் ட்ரம்பின் வழிமுறைகளுக்கு பாரிய ஆதரவான ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகியுள்ளதாகவும், கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்வதாக பிரித்தானியாவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளதாக 'த ரைம்ஸ்' செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.