எதிர்காலமே இல்லாத முதியவர்; அமெரிக்க ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த பிரபலம்
எதிர்காலமே இல்லாத முதியவர் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வடகொரிய தலைவர் கிம் ஜோங் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தென் கொரியா தொடர்பில் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையிலேயே கிம் ஜோங் உன் சகோதரி ஜோ பைடனை விமர்சித்துள்ளார்.
வடகொரியா இனி அணு ஆயுத சோதனையை முன்னெடுத்தால், அந்த நாட்டின் அழிவுக்கான ஆரம்பம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. மட்டுமின்றி தென் கொரியாவை பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தங்களும் அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, வடகொரியாவில் இருந்து இனி ஒரு அத்துமீறல் ஏற்பட்டால் அதனை அமெரிக்கா எதிர்கொள்ளும் என்றே முடிவாகியுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தமாமானது வட கொரியாவிற்கு எதிரான விரோதமான மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை என கிம் ஜோங் சகோதரி கிம் யொ ஜோங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மட்டுமின்றி, ஜோ பைடன் நிர்வாகத்தின் இந்த செயல், பொறுப்பற்றது மட்டுமின்றி, அசட்டு தைரியம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜோ பைடன் பேசுகையில் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும் என குறிப்பிட்டுள்ளார், அதுவும் உலக நாடுகள் கேட்கும் படியாக. இது வெளிப்படையாக விடுக்கப்படும் அச்சுறுத்தல் அல்லவா எனவும் கிம் யோ கேள்வி எழுப்பியுள்ளார்.