ரிஷி சுனக்கிற்கு தீபாவளி இனிப்புகளை வழங்கிய அரசர் சார்லஸ்!

United Kingdom Rishi Sunak King Charles III
By Sundaresan Oct 26, 2022 05:47 AM GMT
Sundaresan

Sundaresan

Report

இங்கிலாந்து பிரதமராக அறிவிக்கப்பட்ட இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு(Rishi Sunak) அரசர் மூன்றாம் சார்லஸ்(King Charles) நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகளை வழங்கினார்.

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் ரிஷி சுனக்(Rishi Sunak) முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். 200 ஆண்டுகளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமர் என்ற பெருமையுடன் இந்த பதவியை அலங்கரிக்கிறார்.

அரசர் மூன்றாம் சார்லஸ் (King Charles)முறைப்படி புதிய கன்சர்வேடிவ் தலைவராக ரிஷி சுனக்கை(Rishi Sunak) நியமித்த பின்பு, அந்நிகழ்ச்சியில், சுனக்கிற்கு நல்லெண்ண அடிப்படையில் தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன.

ரிஷி சுனக்கிற்கு தீபாவளி இனிப்புகளை வழங்கிய அரசர் சார்லஸ்! | King Charles Iii Diwali Sweets Rishi Sunak

இந்துக்களால் 5 நாட்கள் கொண்டாடப்படும் ஒளியின் திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகையையொட்டி ரிஷி சுனக்கின்(Rishi Sunak) பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதுபற்றி தி ராயல் பேமிலி சேனல் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் (Rishi Sunak)ஆகிய இருவரும் அரண்மனையின் 1844-ம் எண்ணிடப்பட்ட அறையில் சந்தித்து கொண்டனர்.

அந்த அறையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வைக்கப்பட்டு இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட இனிப்புகள் சாப்பிடப்பட்டன என தெரிவித்து உள்ளது. இங்கிலாந்தின் புதிய பிரதமர் 42 வயதேயான ரிஷி சுனக்கிற்கு(Rishi Sunak), பிரதமர் மோடி, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இங்கிலாந்தின் 57-வது பிரதமரான ரிஷி சுனக்(Rishi Sunak), யார்க்ஷயர் தொகுதியின் எம்.பி.யாக பதவியேற்றபோது பகவத் கீதையை கொண்டு வந்து பதவியேற்றார். அவ்வாறு செய்த முதல் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்.

தன்னை இந்து என கூறி கொள்வதில் பெருமை கொள்கிறேன் என சுனக் கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக்(Rishi Sunak), அரசர் மூன்றாம் சார்லசை நேற்று சந்தித்து பேசினார்.

ரிஷி சுனக்கிற்கு தீபாவளி இனிப்புகளை வழங்கிய அரசர் சார்லஸ்! | King Charles Iii Diwali Sweets Rishi Sunak

இதன்பின்பு, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக ரிஷி சுனக்கை அறிவித்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் முதல் இந்து பிரதமர் என்ற பெருமையை சுனக் பெற்றதுடன், தீபாவளி பண்டிகையையொட்டி அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

தீபாவளி அன்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு வரலாற்று தருணம் என இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்கள் புகழ்ந்து உள்ளனர். ரிஷி சுனக்(Rishi Sunak), கடந்த 2020-ம் ஆண்டு நிதி மந்திரியாக பதவி வகித்தபோது, 11 டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வெளியே தீபாவளி அன்று மெழுகுவர்த்திகளை ஏற்றினார்.

அதன் தொடர்ச்சியாக, தீபாவளி பண்டிகையில், அவர் அந்நாட்டின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்று உள்ளார்.  

மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US