சேவை பெறுனர்களிடம் மில்லியன் கணக்கில் மோசடி செய்த சட்டத்தரணி கைது
சேவை பெறுனர்களிடம் பல மில்லியன் டொலர்கள் மோசடி செய்த சட்டத்தரணி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அடகுக் கடன் கட்டணத் தொகைகளை குறித்த சட்டத்தரணி இவ்வாறு மோசடி செய்துள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாஹிட் மாலிக் சட்ட சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சாஹிட் மாலிக் என்ற 41 வயதான சட்டத்தரணியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்ட சேவை பெற்றுக் கொள்ள வரும் நபர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கட்டணங்களை செலுத்தாத காரணத்தினால் சுமார் 10 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடு சென்று நாடு திரும்பிய மாலிக்கை பியர்சன் விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அப்பாவி மக்களின் பணத்தை சட்டத்தரணி மாலிக் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.