கனடாவில் உயிர் காக்கும் மருந்துகளுக்கு கொள்ளை விலை: வெளியான புதிய ஆணை
கனடாவில் தற்போது உயிர் காக்கும் மருந்துகளுக்கு கொள்ளை விலை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக விலைகளை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கனடாவில் உயிர் காக்கும் மருந்துகளின் விலைகளை கண்காணிக்கும் அமைப்பான PMPRB இது தொடர்பில் தெரிவிக்கையில் ஹொரைசன் பார்மா வெளியிடும் Procysbi மருந்துக்கு எப்போதும் அதிக விலையே காணப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளது.
2017ல் இருந்தே விற்பனையில் இருந்துவரும் இந்த மருந்தானது 2018ல் 3,000 சதவீதம் அளவுக்கு விலை உயர்வு கண்டதாக நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆதாவது ஓராண்டுக்கான மருந்து கட்டணத்தில் 10,000 டொலர் முதல் 300,000 டொலர் வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையிலேயே மருந்துகளின் விலைகளை குறைக்க வேண்டும் என ஹொரைசன் பார்மாவுக்கு PMPRB உத்தரவிட்டுள்ளது. ஆண்டுக்கான மருந்து கட்டணம் 100,000 டொலர் என்பது உச்ச வரம்பாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற முடிவுகள் மிக அரிதாகவே முன்னெடுக்கப்படும் எனவும், 1993ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை 10 முறை மட்டுமே PMPRB மருந்துகளின் விலை தொடர்பில் புதிய ஆணை வெளியிட்டுள்ளது.