வெளிநாடொன்றில் பயங்கரம் ; கூண்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபரை துவம்சம் செய்த சிங்கம்
பிரேசிலின் ஜோவா பெசோவா நகரில் ஜூபோடானியோ அருடா கமாரா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கெர்சன் டி மெலோ மச்சாடோ என்ற 19 வயது வாலிபர் சென்றார்.
அவர் திடீரென்று சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டின் வேலி மீது ஏறினார். பின்னர் அங்கிருந்த மரம் வழியாக கூண்டுக்குள் இறங்க முயற்சித்தார்.

இதை பார்த்த சிங்கம் மரத்தை நோக்கி சென்று அந்த வாலிபரை தாக்கி இழுத்து சென்றது. சிங்கம் கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த மச்சாடோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மச்சாடோவுக்கு சில மனநல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நீண்ட காலமாக சிங்கத்தை அடக்கும் நபராக மாற விரும்பி உள்ளார்.
ஆப்பிரிக்காவுக்கு சென்று சிங்கங்களை பராமரிக்கும் பணியில் சேர வேண்டும் என்று விரும்பிய அவர் அதற்காக ஒரு முறை விமானத்தின் தரையிறங்கும் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்ய முயன்றார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தெரிவித்தார்.