கனடாவில் இஸ்லாமிய குடும்பம் கொல்லப்பட்ட விவகாரம்: அரசுக்கு அமைப்பொன்று விடுத்துள்ள கோரிக்கை
கனடாவில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளார்.
கனடாவில், 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman(44), தம்பதியரின் மகள் Yumna Salman (15), மகன் Fayez Afzal (9)மற்றும் Afzaalஇன் தாயார் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, Nathaniel Veltman (20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதினார்.
வேன் மோதியதில், Salman Afzaal, அவரது மனைவி Madiha Salman, மகள் Yumna Salman மற்றும் 74 வயதாகும் Afzaalஇன் தாய் ஆகியோர் கொல்லப்பட்டனர். தம்பதியரின் மகன் Fayez Afzal படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்கள் மீதான வெறுப்பு காரணமாக Nathaniel வேனை வேண்டுமென்றே மோதியதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், ஒரு குடும்பம் முழுவதையும் கொலை செய்த Nathaniel மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த செய்தி வெளியானதால் கொந்தளித்துப்போன இஸ்லாமிய அமைப்பொன்று, அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அதாவது, Afzaal குடும்பம் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமிய வெறுப்புக்கு எதிராக Our London Family Act என்னும் மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
ஆனால், 2022இல் ஒன்ராறியோவில் மாகாண தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த மசோதா முடங்கிப்போய்விட்டது.
தற்போது, Nathaniel மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த மசோதாவை மீண்டும் அறிமுகம் செய்யவேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.