பெரும் அதிர்ஸ்டசாலிகளை தேடி வரும் கனடிய லொத்தர் சீட்டு நிறுவனம்
கனடாவின் லொடோ கியூபகெ் நிறுவனம் தற்போது மூன்று பெரும் லொத்தர் சீட்டு வெற்றியாளர்களைத் தேடி வருகிறது.
இதில் இரண்டு பேர் தலா 1 மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளனர் என்பதுடன் மேலும் ஒருவர், வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் 25,000 டொலர் பெறும் கிரான்ட் வை லொத்தர் சீட்டு வெற்றியாளராக உள்ளார்.
கிரான்ட் வை வாழ்நாள் லொத்தர் சீட்டு லானாடுயிரே மாகாணத்தின் டவுட்டாரி பிராந்தியத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வெற்றியாளர் நவம்பர் 28க்குள் தனது பரிசுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மற்றும் ஜூன் மாதம் நடைபெற்ற சீட்டிலுப்புக்களின் போது ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்ற இரண்டு அதிர்ஸ்டசாலிகளும் இதுவரையில் தங்களது வெற்றிக்கான உரிமையை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
லொத்தர் சீட்டு கொள்வனவு செய்தவர்கள் அனைவரும் தங்கள் சீட்டுகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் பயன்பாடு மூலம் சரிபார்க்குமாறு லொத்தர் சீட்டு நிறுவனம் நினைவூட்டியுள்ளது.
பரிசு வென்றெடுக்கப்பட்டு ஓராண்டு காலத்திற்குள் வெற்றி பரிசினை பெற்றுக்கொள்ள உரிமை கோரப்படாத பரிசுத் தொகை ஏனைய வெற்றியாளர்களுக்கு போனஸ் பரிசாக வழங்கப்படுகின்றது.