பிரான்ஸில் காதலன் வெறிச்செயல்
பிரான்ஸில் காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த குறித்த யுவதியின் தந்தை பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸின் வடபகுதியான Ronchin பகுதியில் உள்ள குடியிருப்பில் யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட காதலன் ஆப்கான் நாட்டை சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யுவதியின் குடியிருப்பு கட்டிடத்தில் வைத்தே அந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அந்த இளைஞன் மத ரீதியான விடயங்கள் அல்லது மத சார்பு ரீதியான காரணங்களுக்காக கொலை செய்தமைக்கான ஆதரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
19 வயதுடைய யுவதியின் வீட்டிற்கு இளைஞன் வருவதாகவும் சில பொருட்களை எடுக்க வேண்டும் என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞன் வீட்டிற்கு வருவதற்கு முன்னரே அவர் மீதான அச்சத்தில் அவர் தந்தைக்கு தகவல் வழங்கியுள்ளார். தந்தை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். எனினும் அதற்குள் அவர் யுவதியை கொலை செய்துவிட்டு உங்கள் மகளை கொன்றுவிட்டேன் தந்தையிடம் இளைஞர் கூறியுள்ளார்.
மேலும் உயிரிழந்த யுவதி இளைஞனுடன் காதல் தொடர்பை துண்டித்த நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.