மஹிந்த - பசில் இருவர் தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை ஓகஸ்ட் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி சூழலுக்கு இடையே அங்கு அரசியல் குழப்பங்களும் இருந்து வருகின்றன. தற்போது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பதவியேற்றுள்ளார்.
இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜக்ஷ, (Mahinda Rajapaksa) முன்னாள் நிதி மந்திரியும் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற கொழும்பு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் இன்று (27-07-2022) நடைபெற்ற வழக்கின் விசாரணையில் தடையை ஒகஸ்ட் 2-ம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.