லண்டனில் திடீரென மூடப்பட்ட முக்கிய விமான நிலையம்
இங்கிலாந்தின் முக்கிய மற்றும் மிகப்பெரிய விமான நிலையமாகக் கருதப்படும் ஹீத்ரோ விமான நிலையம் இன்று (21) நாள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் ஒரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து காரணமாக விமான நிலையம் இன்று முழுவதும் மூடப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக விமான நிலையத்தில் மின் தடை ஏற்பட்டதால், பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு லண்டனின் ஹேய்ஸில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, மேலும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து சுமார் 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்க பத்து தீயணைப்பு இயந்திரங்களும் சுமார் 70 தீயணைப்பு வீரர்களும் அனுப்பப்பட்டுள்ளதாக லண்டன் தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. கூடுதலாக, தீ விபத்து காரணமாக ஏற்பட்ட மின் தடை காரணமாக 16,300க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றன.