செலவுகளை குறைத்துக் கொள்ளும் கனேடியர்கள்; காரணம் என்ன தெரியுமா?
அண்மைய மாதங்களில் பெரும்பான்மையான கனேடியர்கள் தங்களது செலவுகளை குறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கியூஸ் ரைட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கனடாவில் மூன்றில் இரண்டு வீதமானவர்கள் பணம் தொடர்பில் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்ட கனேடியர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு ஈடுகொடுக்க முடியாதிருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய மாதங்களில் செலவுகளை தாங்கள் குறைத்துக் கொண்டுள்ளதாக 80 வீதமான கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.
செலவுகளை குறைத்துக் கொள்ளல் அல்லது முக்கியமான கொள்வனவுகளை தாமதப்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணங்களை குறைத்துக் கொண்டுள்ளதாகவும், நன்கொடைகளை வரையறுத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
2279 பேரிடம் இந்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.