வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபரை தேடும் பொலிஸார்
றொரன்டோவில் பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
ஈஸ்ட் யோர்க் பிராந்தியத்தில் இவ்வாறு வீடுகள், வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
37 வயதான கெவின் கிரேய் என்ற நபரே இந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஜுலை மாதம் 15ம் திகதி முதல் இந்த மாதம் 20ம் திகதி வரையில் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நபர் சுமார் 11 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை உடைத்து கொள்ளையிட்டுள்ளதுடன் மேலும் 9 கட்டிடங்களை உடைக்க முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கெவின், அண்மையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
நீண்ட முடியை கொண்ட இவர் 165 பவுண்ட்கள் எடையுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.