சிட்னி குப்பைக் குவியல்களில் இருந்து வருமானம் பெறும் நபர்
ஆஸ்திரேலியாவில் மக்கள் வேண்டாம் என்று குப்பைத் தொட்டிகளில் வீசப்படும் பொருட்களை விற்று ஒரே ஆண்டில் 56.20 லட்ச ரூபாயை இளைஞர் ஒருவர் சம்பாதித்துள்ளார் என்ற தகவல் வைரலாகி வருகிறது.
சிட்னியில் உள்ள குப்பைக் குவியல்களில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை சேகரித்து ரூ.56.20 லட்சத்தை கடந்த ஆண்டு லியோனார்டோ அர்பானோ சம்பாதித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்த குப்பைக் குவியல்களில் இருந்து குளிர்சாதன பெட்டி, அலமாரி, படுக்கைகள் போன்ற பெரிய பொருட்களுடன், தங்க நகைகளையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் காலை உணவுக்குப் பிறகு, அவர் தனது சைக்கிள் அல்லது காரில் சிட்னி நகரின் தெருக்களில் குப்பைக் குவியல்களைத் தேடுவார்.
அதிலிருந்து அவர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விஷயங்களைக் கண்டுபிடிப்பார் என்றும் கூறப்படுகிறது.